சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கோயம்புத்தூர் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையரகத்தில் ஜிஎஸ்டி தின விழா

प्रविष्टि तिथि: 01 JUL 2026 9:05PM by PIB Chennai

‘எளிமைப்படுத்தப்பட்ட வரி முறை, வலுப்படுத்தப்பட்ட இந்தியா’ என்ற கருப்பொருளின் கீழ், ஜிஎஸ்டி தினம், கோயம்புத்தூரில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையரகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறையின் முதன்மை ஆணையர் திரு தினேஷ் பி. பங்கர்கர் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். விழாவில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் கோயம்புத்தூர் அமர்வு உறுப்பினர் திரு எம். மேத்யூ ஜாலி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், வணிகர்கள், தணிக்கையாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு தினேஷ் பி. பங்கர்கர்,  ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 9 ஆண்டுகளில், கோயம்புத்தூர் மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் வருவாய் வசூலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று கூறினார். 2017-18 நிதியாண்டில் ரூ.1,105 கோடியாக இருந்த வாரியத்தின் வருவாய் வசூல், 2025-26 நிதியாண்டில் ரூ.4,388.72 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், 2025-26 நிதியாண்டில் 12.35% ஆக உள்ள வளர்ச்சி, தேசிய அளவிலான ஜிஎஸ்டி வளர்ச்சி விகிதத்தை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், கோயம்புத்தூர் மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இது வர்த்தகம் மற்றும் தொழில் துறையினரிடமிருந்து கிடைத்த நேர்மறையான வரவேற்பை பிரதிபலிப்பதாகக் கூறினார்.

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பப் பயன்பாடு, சட்ட நடவடிக்கைகளின் சீரமைப்பு மற்றும் வரி செலுத்துவோருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

விழாவில் பேசிய திரு எம். மேத்யூ ஜாலி, சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான வரி சீர்திருத்தங்களில் ஒன்றாக ஜிஎஸ்டி அமலாக்கத்தைக் குறிப்பிட்டார். வரி அதிகாரிகள் வெறும் வரி வசூலிப்பவர்களாக மட்டும் செயல்படாமல், வரி செலுத்துவோருடன் நேர்மையான, வெளிப்படையான மற்றும் கண்ணியமான தொடர்புகள் மூலம் நம்பிக்கையை வளர்க்கும் வகையில், அரசின் தூதுவர்களாகவும், ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும், வரி ஏய்ப்புக்கெதிரான பயனுள்ள அமலாக்கத்துடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இணைக்கும் ஒரு சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்றி, வழக்குகளைக் குறைக்கவும், ஜிஎஸ்டி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும், நேர்மையான, பாரபட்சமற்ற மற்றும் சட்டப்பூர்வமான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280122&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2280143) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English