தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் மொபைல் நெட்வொர்க் தரம் குறித்து டிராய் பரிசோதித்தது
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2026 12:25PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பெங்களூரு மண்டல அலுவலகம், மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டத்தின், புனே முதல் சதாரா வரையிலான நெடுஞ்சாலைப் பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் மொபைல் நெட்வொர்க் தரப் பரிசோதனையை நடத்தியது. ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் குரல் அழைப்பு, இணையச் சேவைகளின் தரம் தொடர்பாக இதில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
நெட்வொர்க் சிக்னல் கிடைக்கும் தன்மை, அழைப்பு துண்டிப்பு வீதம், தரவு பதிவிறக்க வேகம் போன்ற முக்கிய காரணிகள் சோதிக்கப்பட்டன. இந்த கள ஆய்வில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மிக அதிவேக பதிவிறக்கத் திறனை நுகர்வோருக்கு வழங்கியது தெரியவந்துள்ளது. பிஎஸ்என்எல் சேவைத் தரத்தில் சற்று பின்தங்கியுள்ளது. மொபைல் பயனர்களின் விழிப்புணர்வுக்காகவும், நிறுவனங்கள் தங்களின் சேவையை மேம்படுத்தவும் இந்த விவரங்கள் பயனுள்ளதாக இருக்கும். நுகர்வோர் தங்களின் பகுதிகளில் உள்ள நெட்வொர்க் நிலவரங்களை இதன் மூலம் துல்லியமாக அறிந்துகொள்ளலாம். இது குறித்த முழுமையான அறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279710®=3&lang=1
***
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2280056)
வருகையாளர் எண்ணிக்கை : 37