இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் வந்தே மாதரம் முகாம் நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
01 JUL 2026 4:00PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எனது இளைய பாரதம் (மை பாரத்) அமைப்பு சார்பில், நடைபெற்ற முதலாவது வந்தே மாதரம் முகாம் நேற்று (30.06.2026) கொல்கத்தாவில் நிறைவடைந்தது.
தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமை மேற்கு வங்கம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மை பாரத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமில், தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 150 இளைஞர்கள் பங்கேற்றனர். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்கள், தலைமைத்துவம், பொறுப்புணர்வு, தேசக் கட்டமைப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சிகள், சமூகப் பணிகள் வாயிலாக தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு வலுப்படுத்தப்பட்டது. இறுதியாக, அனைவரும் இணைந்து தேசியப் பாடலான வந்தே மாதரத்தைப் பாடியதுடன் முகாம் நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279844®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2280046)
आगंतुक पटल : 8