தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
வடக்கு தில்லி பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் பரிசோதித்தது
प्रविष्टि तिथि:
01 JUL 2026 3:38PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), வடக்கு தில்லி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் மொபைல் நெட்வொர்க் குறித்த தரப் பரிசோதனையை நடத்தியது. ஏர்டெல், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் குரல் அழைப்பு, இணையச் சேவைகளின் தரம் தொடர்பாக இதில் ஆய்வு செய்யப்பட்டது.
நெட்வொர்க் சிக்னல் கிடைக்கும் தன்மை, அழைப்பு துண்டிப்பு வீதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்ற வேகம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் சோதிக்கப்பட்டன. இந்த கள ஆய்வில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் அதிக பதிவிறக்க வேகத்தை வழங்கியதாக தெரியவந்துள்ளது. எம்டிஎன்எல் சேவைத் தரம் பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியிருந்தது. மொபைல் பயனர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களின் சேவையை மேம்படுத்தவும் இந்த ஆய்வு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279847®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2280041)
आगंतुक पटल : 9