சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மருந்து-எதிர்ப்பு திறன் கொண்ட பச்சிளம் குழந்தைகளின் இரத்தத் தொற்றை எதிர்கொள்ளும் உலகளாவிய மருத்துவ ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பில் ஜிப்மர் முன்னிலை வகிக்கிறது
प्रविष्टि तिथि:
01 JUL 2026 6:13PM by PIB Chennai
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இரத்தத் தொற்று, அதிகரித்து வரும் நுண்ணுயிர்-எதிர்ப்பு மருந்து எதிர்ப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் நியோசெப் 1 சர்வதேச மருத்துவ ஆய்வில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் குழந்தை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உலகளாவிய மருத்துவ ஆராய்ச்சி பங்களிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இந்தப் பன்னாட்டு மருத்துவ ஆய்வை, மருந்து-எதிர்ப்பு தொற்றுகளுக்கான புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கி அனைவருக்கும் சமமான அணுகலை உறுதி செய்யும் இலாப நோக்கமற்ற ஜிஎஆர்டிபி அமைப்பு ஒருங்கிணைக்கிறது. உலகளவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிரிழப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்தத் தொற்றுக்கு, பாதுகாப்பான, பயனுள்ள, அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய குறைந்த செலவிலான நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சேர்க்கைகளை கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இந்த ஆய்வின் முக்கிய பங்கேற்பு மையங்களில் ஒன்றாக விளங்கும் ஜிப்மர், பிறந்த குழந்தைகளின் இரத்தத் தொற்று சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை மேம்படுத்த உதவும் உயர்தர அறிவியல் ஆதாரங்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றவுள்ளது. ஜிப்மரின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவின் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் நிஷாத் பிளக்கல், இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளராக செயல்படுவதுடன், ஆசியா-பசிபிக் நாடுகளின் அனைத்து ஆய்வு மையங்களின் பிரதிநிதியாக நியோசெப் 1 சோதனைக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
ஜிப்மரில் இந்த சோதனையின் கீழ் முதல் குழந்தை பதிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், பிறந்த குழந்தைகளின் இரத்தத் தொற்றை மையமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய சர்வதேச மருத்துவ ஆய்வுகளில் ஒன்றில் இந்தியாவின் பங்களிப்பு தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆசியா, ஆப்பிரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் புதிதாகப் பிறக்கும் சுமார் 3,000 குழந்தைகள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட உள்ளனர்.
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2279984)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English