சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை அஞ்சல் தெற்கு கோட்ட அளவிலான பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் வரும் ஜூலை 15 அன்று நடைபெற உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUN 2026 5:47PM by PIB Chennai
சென்னை அஞ்சல் தெற்கு கோட்ட அளவிலான பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் 15.07.2026 அன்று மாலை 4 மணியளவில், வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர் அஞ்சலக வளாகத்தில் (முதலாவது மாடி) அமைந்துள்ள சென்னை அஞ்சல் தெற்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த அஞ்சல் கோட்ட அளவிலான குறை தீர்ப்பு முகாமின் தலைவர், அஞ்சல் சேவைகள் தொடர்பான புகார்களை வாடிக்கையாளர்களிடம் நேரில் கேட்டு குறைகளை நிவர்த்தி செய்வார். வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை 10.07.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம். அஞ்சல் சேவைகள் தொடர்பான புகார்களுக்கு, தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்புநர், பெறுநரின் முழு முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), விபி, பதிவுத்தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் அல்லது விரைவுத் தபால் ஆகியவை குறித்த முழு விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அஞ்சலக சேமிப்புக் கணக்கு, அஞ்சல் ஆயுள் காப்பீடு அல்லது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சம்பந்தமான புகாராக இருப்பின், சேமிப்புக் கணக்கு எண் அல்லது பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவரின் அல்லது காப்பீடு செய்தவரின் பெயர், முழு முகவரி, அஞ்சலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
புகார்களை சாதாரண தபால் அல்லது விரைவுத் தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் மூலமாக அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தபால் உறையின் மீது முன்பக்கத்தின் மேல் பகுதியில் "கோட்ட அளவிலான அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் - சென்னை அஞ்சல் தெற்கு கோட்டம்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
***
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2279484)
வருகையாளர் எண்ணிக்கை : 43