சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரத் துறை முழுவதும் மருந்து தொடர்பான தகவல்களைத் தரப்படுத்த, மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா மருந்துப் பதிவகத்தைத் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 4:51PM by PIB Chennai

சுகாதார சேவைகளை வழங்குவதில் மருந்துகள் மிக முக்கியமான தரவுக் கூறுகளில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் உள்ள சுகாதார அமைப்புகள் முழுவதும், ஒரே மருந்து பெரும்பாலும் வெவ்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் குறிப்பிடப்படுவதால், முரண்பாடுகள், போலித்தன்மை, தரவு உள்ளீட்டுப் பிழைகள், ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாமை போன்றவை ஏற்படுகின்றன. இது மருத்துவம் சார்ந்து  முடிவெடுத்தல், மின்னணு மருந்துச் சீட்டுகள், விநியோகத் தொடர் மேலாண்மை, தொடர் சிகிச்சை ஆகியவற்றில் சவால்களை உருவாக்குகிறது.

இந்த இடைவெளியை சரி செய்யும் வகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, மருந்து தொடர்பான தகவல்களுக்கான ஒரு ஒருங்கிணைந்த, தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமாக மருந்துப் பதிவகத்தைத் தொடங்கி வைத்தார். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்தப் பதிவகம், இந்தியாவில் உள்ள மருந்துகளுக்கு ஒரே நம்பகமான தகவல் மூலம் செயல்படுகிறது. மேலும், சுகாதார அமைப்புகள் முழுவதும் மருந்துத் தரவுகளைத் தொடர்ச்சியாக அடையாளம் காணவும், சேமிக்கவும், பரிமாறவும், பயன்படுத்தவும் இது உதவுகிறது.

தற்போது, மருந்துப் பதிவேட்டில் 123,000-க்கும் அதிகமான பிராண்டட் மருந்துகள், 10,000-க்கும் அதிகமான பொது மருந்துகள், 29,000-க்கும் அதிகமான மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278991&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2279177) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी