அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நிலைத்தன்மை, குறைந்த விலையிலான நீர் சார்ந்த மின்கலன்களுக்கான மின்பகுப்பு முறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 2:25PM by PIB Chennai
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மின்பகுப்பு சேர்க்கை முறையில் பாதுகாப்பான நிலைத்தன்மை கொண்ட குறைந்த செலவில் மீண்டும் மிண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய துத்தநாக மின்கல வடிவமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீர் சார்ந்த துத்துநாக அயனி மின்கலன்கள், லித்தியம் மின்கலன்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில் பாதுகாப்பான நீடித்தத் தன்மை கொண்டதாக உருவாக்க முடியும். எனினும் துத்துநாக பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் காரணமாக அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுகிறது. குறைந்த விலையில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மின்கலனின் ஆயுளை நீட்டிப்பதற்கான ஆய்வுகள் பெரிய அளவிலான புதுப்பித்தக்க எரிசக்தி சேமிப்புக்கு வழிவகுக்கும்.
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான நானோ அறிவியில் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நீர் அடிப்படையிலான துத்துநாக அயனி மின்கலன்களை மின்பகுப்பு சேர்க்கை முறையில் உருவாக்கியுள்ளனர்.
குளுடாமிக் அமிலத்தை சோடியம் ஹைட்ராக்சட் மற்றும் நீருடன் கரைத்து மேலும் சில அமிலங்களைச் சேர்த்து அந்தக் கலவையை 24 மணி நேரம் நைட்ரஜன் வாயுவின் 70 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சூடேற்றப்பட்டு பின்னர் அதனை பிரித்தெடுத்து ஒரேநிலை உலர்த்துதல் மூலம் படிகத் தூளாக உருவாக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278913®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2279047)
आगंतुक पटल : 11