சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தாவர செல் குறித்த உயர் சிறப்பு ஆராய்ச்சி மையத்தை சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் என். கலைச்செல்வி திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 JUN 2026 1:10PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம், ஹெர்பாலைஃப் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் ‘ஹெர்பாலைஃப்- ஐஐடி மெட்ராஸ் உயர் சிறப்பு மையத்தைத் தொடங்கியுள்ளன. இந்த மையத்தை அறிவியல் & தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குனர் திருமதி என் கலைச்செல்வி திறந்து வைத்தார்.

 

தாவர செல் நொதித்தலைப் பொறுத்தவரை பயன்பாட்டு ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவிலேயே இதுதான் முதலாவது பிரத்யேக ஆய்வகமாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டம் 22 ஜூன் 2026 அன்று தொடங்கப்பட்டது. நிலையான உயிரி உற்பத்தி, தாவரத்தில் இருந்து பெறப்படும் அடுத்த தலைமுறை ஆரோக்கிய தயாரிப்புகளை உருவாக்குவதில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கை இதுவாகும்.

தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்தில் நிலையான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான தேசிய மையமாக இம்மையத்தை திகழச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயிரிப் பொருட்களின் நிலையான அளவிடக்கூடிய உற்பத்தியை சாத்தியமாகவும், செரிவூட்டப்பட்ட மூலிகை சாறுகள், அதிக மதிப்புள்ள பைட்டோகெமிக்கல்களை உருவாக்கவும் ஆய்வக கண்டுபிடிப்புகளுக்கும் தொழிற்துறை பயன்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும் இம்மையம் இலக்க நிர்ணயித்துள்ளது.

 

சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, தேசிய பல்லுயிர் வாரியத்தின் தலைவர் திரு. வீரேந்திர ஆர். திவாரி, ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு அஜய் கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2278136) வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க: English