தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வழக்குகளுக்கு விரைவான தீர்வு: தில்லியில் 12 தொழிலாளர்களுக்கு ரூ.10.32 லட்சம் வழங்கப்பட்டது

प्रविष्टि तिथि: 25 JUN 2026 6:42PM by PIB Chennai

தொழிலாளர் நல அமைச்சகம், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தொழிலாளர் வழக்குகளை விரைந்து தீர்க்கும் வகையில் சிறப்பு முகாம் ஒன்றை நடத்தியது. தில்லி மெட்ரோ ரயில் கழகம்  மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 193 வழக்குகள், பிராந்திய தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

 

இந்தச் சிறப்பு முகாமில் தலைமைத் தொழிலாளர் ஆணையர் சோனல் மிஸ்ரா கலந்துகொண்டு, தொழிலாளர் சட்டங்களை முறையாகப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதில் 23 வழக்குகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டு, 12 தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையாக ரூ. 10,32,484 வழங்கப்பட்டது. எஞ்சிய வழக்குகளுக்கு அடுத்தக்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277929&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2277929

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2278061) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati