நிதி அமைச்சகம்
கருவூலக் கடன் பத்திரங்கள் ஏலத்திற்கான கால அட்டவணை வெளியீடு
प्रविष्टि तिथि:
25 JUN 2026 6:07PM by PIB Chennai
செப்டம்பர் 2026 உடன் முடிவடையும் காலாண்டிற்கு கருவூலக் கடன் பத்திரங்கள் ஏலத்திற்கான கால அட்டவணையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேவைகள், மாறிவரும் சந்தை நிலவரங்கள், இதர காரணிகளின் அடிப்படையில் ஏலத் தொகை, நேரத்தை ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு மாற்றியமைக்கலாம். சந்தைக்கு உரிய அறிவிப்பு வழங்கிய பின்னரே இந்த மாற்றங்கள் செய்யப்படும். விடுமுறை நாட்கள் போன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த அட்டவணை மாற்றத்திற்கு உட்பட்டது. இத்தகைய மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அவை செய்திக் குறிப்புகள் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
இந்த ஏல நடைமுறைகள் அனைத்தும் மத்திய அரசால் வெளியிடப்பட்டு, அவ்வப்போது திருத்தப்படும் பொது அறிவிப்பு எண் 4-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த கால அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277896®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2278033)
आगंतुक पटल : 9