புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புள்ளியியல் தினம் ஜூன் 29 அன்று கொண்டாடப்படவுள்ளது

प्रविष्टि तिथि: 25 JUN 2026 4:00PM by PIB Chennai

மத்திய புள்ளியியல்திட்ட அமலாக்க அமைச்சகம், 2026 ஜூன் 29 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 20-வது புள்ளியியல் தினத்தைக் கொண்டாடவுள்ளது. புள்ளியியல்பொருளாதாரத் திட்டமிடல் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்த பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் பிறந்த தினத்தை  நினைவுகூரும் வகையில்ஆண்டுதோறும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கான சமூக-பொருளாதாரத் திட்டமிடல்கொள்கை உருவாக்கத்தில் புள்ளிவிவரங்களின் முக்கியத்துவம் குறித்துகுறிப்பாக இளைய தலைமுறையினரிடையே பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2007-ல் தொடங்கப்பட்டதிலிருந்து ஆண்டுதோறும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருளுடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 2026-ம் ஆண்டிற்கான கருப்பொருள் "நிர்வாகத் தரவுகளின் திறனை வெளிக்கொணர்தல்" என்பதாகும். இதுசான்றுகளின் அடிப்படையில் கொள்கை உருவாக்கம்நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்வதற்குஅதற்கான செயல்முறைகள் மூலம் உருவாக்கப்படும் தரவுகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறது. சரியான நேரத்தில்நம்பகமானவிரிவான புள்ளிவிவரங்களை உருவாக்க இத்தகைய தரவுகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்குத் தேவையான தரவுத் தரம்ஒன்றோடொன்று இயங்கும் திறன்ஒருங்கிணைப்புநிர்வாகக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தக் கருப்பொருள் முன்னிலைப்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சியை பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில்மத்திய புள்ளியியல்திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் சிறப்புரையாற்றுகிறார். மேலும்தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் டாக்டர் சைபால் சட்டோபாத்யாய்அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க் ஆகியோரின் உரைகளும் இந்தத் தொடக்க அமர்வில் இடம்பெறும். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டும் வகையில்மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் அண்மைக்கால சாதனைகளை முன்னிலைப்படுத்தும் காணொளி ஒன்றும் இந்த அமர்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277759&reg=3&lang=1

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2277956) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी