எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சேர்க்கும் செயில்

प्रविष्टि तिथि: 24 JUN 2026 7:02PM by PIB Chennai

இந்தியக் கடற்படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட  ஐஎன்எஸ் துனாகிரி, ஐஎன்எஸ் அக்ரே, ஐஎன்எஸ் ஷன்சோதக் ஆகிய 3 போர்க்கப்பல்களுக்குத் தேவையான 5,700 டன் சிறப்பு எஃகு முழுவதையும் வழங்கி, நாட்டின் கடற்படைத் திறன்களை வலுப்படுத்துவதில் எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய எஃகு ஆணையம் (செயில்) தனது பங்களிப்பை வலுப்படுத்தியுள்ளது. இந்த மூன்று மேம்பட்ட கப்பல்களும், 2026 ஜூன் 21 அன்று கொல்கத்தாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்தியக் கடற்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டன.

செயில் நிறுவனம் வழங்கிய எஃகுப் பொருட்களில், சிறப்புத் தரத்திலான டிஎம்ஆர் 249ஏ ரக தகடுகளும் அடங்கும். இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மகாரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனத்தின் வலுவான தொழில்நுட்பத் திறனை பறைசாற்றும் வகையில், பொக்காரோ, பிலாய் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களில் உள்ள அதன் முதன்மை ஆலைகளில் இந்தச் சிறப்பு வாய்ந்த, பாதுகாப்புத் தரத்திலான எஃகு மிகத் துல்லியமாகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

செயில் நிறுவனம், தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்தல்  முன்முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. முக்கிய கடற்படை தளங்களுக்கான சிறப்பு எஃகை உற்பத்தி செய்வதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்புத் துறை உள்நாட்டுமயமாக்கலில், செயில் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக மாறியுள்ளது. பாதுகாப்புத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நிறுவனம் தனது தகடு உற்பத்தி ஆலைகளில், குறிப்பாக ரூர்கேலாவில் உள்ள சிறப்புத் தகடு ஆலையில், பாதுகாப்புத் தேவைகளுக்கான டிஎம்ஆர் தரத் தகடுகளின் உற்பத்தியை அதிகரிக்க முன்கூட்டியே கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277522&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2277588) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी