சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மரம் நடும் இயக்கத்துடன் புதிய மாணவர்களை வரவேற்ற ஐஐஎம் திருச்சி
प्रविष्टि तिथि:
24 JUN 2026 7:45PM by PIB Chennai

திருச்சிராப்பள்ளி இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம் திருச்சி), புதிய கல்வி ஆண்டு மாணவர்களைச் சமூகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதிய தொடக்கத்திற்கான கொண்டாட்டத்துடன் வரவேற்றது.
இந்த நாள் கல்வி நிறுவன வளாகத்தில் மரம் நடும் இயக்கத்துடன் தொடங்கியது. மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டது, அவர்களின் கல்விப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ஐஐஎம் திருச்சி-ன் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
ஐஐஎம் திருச்சி கல்வி புலம் தலைவர் பேராசிரியர் சதீஷ் எஸ் மகேஸ்வரப்பா தனது வரவேற்புரையில், புதிய மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், திருச்சி ஐஐஎம்-ல் சேர்க்கை பெற்றது ஒரு முக்கிய மைல்கல்லே தவிர, அதுவே இறுதி இலக்கு அல்ல என்பதை நினைவூட்டினார். மாணவர்கள் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, ஐஐஎம் திருச்சி பொறுப்பு இயக்குநர் பேராசிரியர் காட்வின் டென்னிசன் உரையாற்றுகையில், இந்நிகழ்வை கல்விச் சாதனையின் கொண்டாட்டமாகவும், புதிய கற்றல் செயல்முறையின் தொடக்கமாகவும் விவரித்தார். கல்வி நிறுவனத்தில் தங்களின் வாய்ப்புகளையும் அனுபவங்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, மேலாண்மை முதுகலைத் திட்டம், மனிதவள மேலாண்மை முதுகலைத் திட்டம், மேலாண்மை முனைவர் பட்டத் திட்டம் மற்றும் நிர்வாக மேலாண்மை முனைவர் பட்டத் திட்டம் ஆகியவற்றில் இயக்குநரின் தகுதிப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இத்தொடக்க விழாவில் பிஎன்ஒய் நிறுவனத்தின் மாதிரி இடர் மேலாண்மை மூத்த இயக்குநர் திரு அர்ஜுன் பெரி மற்றும் அவாசன்ட் நிறுவனத்தின் மேலாண்மைப் பங்குதாரர் திரு அக்ஷய் கன்னா ஆகியோரும் உரையாற்றினர்.
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2277585)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English