நிலக்கரி அமைச்சகம்
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும்: மத்திய அரசு
प्रविष्टि तिथि:
24 JUN 2026 5:46PM by PIB Chennai
நிலக்கரி வாயுவாக்கலை மையமாகக் கொண்டு தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்கள் குறித்த மாநாட்டை மத்திய நிலக்கரி அமைச்சகம் நடத்தியது. இதில் ரஷ்யா, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரிக்ஸ் பிரதிநிதிகள், மூத்த அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு மனோஜ் குமார் ஜா, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் நிலக்கரி வாயுவாக்கலின் முக்கியத்துவத்தை விளக்கினார். இத்தொழில்நுட்பம் மூலம் நிலக்கரியைச் சின்காஸாக மாற்றி, அதன்மூலம் அம்மோனியா, மெத்தனால், ஹைட்ரஜன், செயற்கை எரிபொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இது இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு, உள்நாட்டு நிலக்கரி வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்த உதவும்.
கொள்கை ஆதரவு, நிதி ஊக்கத்தொகை மூலம் 2030-ம் ஆண்டிற்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்கும் இலக்கை எட்ட மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார். தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277486®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2277554)
आगंतुक पटल : 11