பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஸ்ரீநகரில் பஞ்சாயத்து சேவை வழங்கல் குறித்த பிராந்திய பயிலரங்கிற்கு மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
22 JUN 2026 3:37PM by PIB Chennai
மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சேவை மூலம் செழுமை என்ற தலைப்பில் பிராந்திய அளவிலான பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் 2026 ஜூன் 23 அன்று இப்பயிலரங்கு நடைபெறுகிறது. இதை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுனர் திரு மனோஜ் சின்ஹா தொடங்கி வைக்கிறார்.
இப்பயிலரங்கு மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுச்சேவை மையம் – சிறப்பு நோக்க வாகன இயக்கம், ஜம்மு காஷ்மீர் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது. அதிகாரம் பெற்ற, பொறுப்புமிக்க, மக்கள் தேவைகளுக்காக செயல்படும் பஞ்சாத்துராஜ் அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நாட்டின் கிராமப்புறங்களில் மேம்பட்ட சேவைகளை வழங்குவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்குவதற்கும் அமைச்சகம் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இப்பயிலரங்கு நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276598®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2276829)
आगंतुक पटल : 6