சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜூன் மாதத்தில் ₹710 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUN 2026 7:32PM by PIB Chennai
BQRB.jpeg)
மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின், மண்டல வளர்ச்சி ஆணையர் திரு. அலெக்ஸ் பால் மேனன், இ.ஆ.ப., தலைமையில் கூடிய கூட்டத்தில், 2026 ஜூன் மாதத்தில் 7 புதிய சிறப்பு பொருளாதார மண்டல அலகுகள் மற்றும் 4 ஏற்றுமதி சார்ந்த அலகுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, அந்தமான் மற்றும் புதுச்சேரி பிராந்தியம் முதலீடு மற்றும் உற்பத்திக்கு உகந்த இடமாகத் திகழ்வதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இப்புதிய திட்டங்கள் மூலம் மொத்தம் ₹710.39 கோடி முதலீடும், 15,424 வேலைவாய்ப்புகளும் உருவாகும். தொழில்நுட்ப சேவைகள், அதிகரித்த உற்பத்தி, செமிகண்டக்டர் மற்றும் தோல் அல்லாத காலணிகள் தயாரிப்பு ஆகிய துறைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இது காட்டுகிறது.
இக்கூட்டத்தில் வழங்கப்பட்ட முக்கிய ஒப்புதல்கள்:
டி.கே.ஜி டேக்வாங் இந்தியா பிரைவேட் லிமிடெட்: திருச்சி எல்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ₹514.72 கோடி முதலீட்டில் 13,364 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.
கினசிஸ் செமிகண்டக்டர் வயர் சொல்யூஷன்ஸ்: சென்னை தாம்பரம் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் வளாகத்தில் ₹115.20 கோடி முதலீட்டில் 123 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
குளோபல் வி கனெக்ட் டெக்னாலஜிஸ்: ஓசூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 265 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல்: காஞ்சிபுரம் மாவட்டம் கட்டவாக்கத்தில் ₹11 கோடி முதலீட்டில் 1,050 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
ரிஷபா இண்டஸ்ட்ரீஸ் எல்எல்பி: செங்கல்பட்டு மாவட்டம் ஒன் ஹப் சென்னையில் ₹58.10 கோடியில் 145 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இது குறித்து மண்டல வளர்ச்சி ஆணையர் திரு. அலெக்ஸ் பால் மேனன், இ.ஆ.ப., கூறுகையில், "இந்த ஒப்புதல்கள் இப்பிராந்தியத்தின் தொழில்துறை பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. திருச்சியின் காலணி உற்பத்தி மற்றும் சென்னையின் செமிகண்டக்டர் திட்டங்கள் புதிய வளர்ச்சி மையங்களை உருவாக்கி, உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் நம்மை வலுப்படுத்துகின்றன" என்றார்.
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2276817)
வருகையாளர் எண்ணிக்கை : 51