பாதுகாப்பு அமைச்சகம்
ஒரு நாட்டின் கடல்சார் வலிமையைப் பொறுத்து, அதன் பொருளாதார, உத்திசார் செல்வாக்கும் வலுவானதாக இருக்கும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
21 JUN 2026 2:30PM by PIB Chennai
இந்தியாவின் கடற்படையின் தயார்நிலை, உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனில் ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது என்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜூன் 21, 2026 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்று போர்க் கப்பல்களை இந்தியக் கடற்படையுடன் இணைத்தார். அதிநவீன 'ஸ்டெல்த்' எனப்படும் எதிரி நாடுகளின் ரேடார்களில் எளிதில் சிக்காத போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் துனாகிரி', பெரிய அளவிலான கடல்சார் ஆய்வுக்கப்பலான 'ஐஎன்எஸ் சன்சோதக்', நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்களுக்கான, ஆழம் குறைந்த கடற்பகுதியில் செயல்படும் போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் அக்ரே' ஆகியவை இதில் அடங்கும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்தக் கப்பல்கள், நாட்டின் செயல்பாட்டுத் திறன்கள், புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் சூழல் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை கணிசமான அளவில் மேம்படுத்தும்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பாட்டு வரும் இந்தத் தருணத்தில், இந்த நிகழ்வும் தற்செயலாக இணைந்து அமைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், இந்தியாவின் அறிவுசார், கலாச்சார, தேசிய மறுமலர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி வருவதுடன், பல நூற்றாண்டுகளாக கடல்சார் வழித்தடங்கள் மூலம், இந்தியாவை இதர உலக நாடுகளுடன் இணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநிலத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். "இந்த நிகழ்வு தற்சார்பு இந்தியா, பாதுகாப்பான இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா ஆகியத் திட்டங்களின் முன்னேற்றத்தைக் குறிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
ஜூன் 21-ம் தேதி 'உலக நீரியல் ஆய்வு தினம்' கடைபிடிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் அதிநவீன நீரியல் ஆய்வுக்கப்பலான 'ஐஎன்எஸ் சன்சோதக்' அதே நாளில் கடற்படையில் இணைக்கப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க தற்செயல் நிகழ்வு என்று குறிப்பிட்டார். இந்தியக் கடற்படை, விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இந்த சாதனை இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பம், கடல்சார் திறன்களைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார். "வலுவான கடல்சார் திறன்கள் இல்லாமல் எந்தவொரு நாடும் முக்கிய சக்தியாக உருவெடுக்க முடியாது என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276104®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2276349)
आगंतुक पटल : 8