கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் யோகா, இந்தியாவின் மிக வலிமையான நலவாழ்வு இயக்கமாக உருவெடுத்துள்ளது: சர்பானந்த சோனோவால்

प्रविष्टि तिथि: 21 JUN 2026 5:52PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், யோகா உலகிற்கு இந்தியாவின் மிகச் சிறந்த அளித்துள்ள மாபெரும் பங்களிப்பாக  உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

மும்பையின் புகழ்பெற்ற 'கேட்வே ஆஃப் இந்தியா' பகுதியில் மும்பை துறைமுக ஆணையம் ஏற்பாடு செய்திருந்த 12-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய சோனோவால், இது ஒரு பழமையான நாகரிக பாரம்பரியத்தை ஆரோக்கியம், நல்லிணக்கம், முழுமையான நலவாழ்வுக்கான உலகளவிலான மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

யோகாவிற்கு உலகம் முழுவதும் கிடைத்துள்ள அங்கீகாரம் இந்தியாவின் வளர்ந்து வரும் 'மென் சக்தியை' பிரதிபலிப்பதாகவும், இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானம், நலவாழ்வு, நிலையான வாழ்க்கை முறை குறித்த கருத்துக்களை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை இது காட்டுவதாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

"பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடியத் தலைமையின் கீழ், சர்வதேச யோகா தினம் நலவாழ்வு, ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உலகளவிலான மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதாக திரு சோனோவால் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276236&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2276329) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी