மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி பல்கலைக்கழகத்தில் யோகா தினக் கொண்டாட்டங்கள் - மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUN 2026 10:19AM by PIB Chennai

மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இன்று (21.06.2026) புதுதில்லியில் உள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாக மைதானத்தில் நடைபெற்ற 12-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு யோகா ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக விளங்குகிறது என்றும், ஆரோக்கியமான, சமச்சீரான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் கூறினார். மேலும், யோகா தனிநபர்களை உடல் நலம், மன அமைதி, முழுமையான வளர்ச்சி ஆகியவற்றை நோக்கித் தொடர்ந்து வழிநடத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சிகளால், யோகா உலகெங்கிலும் பரவி, மக்களை நல்வாழ்வை நோக்கி ஊக்குவிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார், உயர் கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங், கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275950&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2276303) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi