சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

எம்.வி. எம்பிரஸ் சொகுசுக் கப்பலுக்கு சென்னை துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு

प्रविष्टि तिथि: 20 JUN 2026 1:54PM by PIB Chennai

 

தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்குச் சான்றாக, எம்.வி. எம்பிரஸ் சொகுசு கப்பல் இன்று (20.06.2026) சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்தது. அந்த எம்.வி. எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் 1,800 பயணிகள் சென்னை வந்தடைந்தனர். இதில், சென்னையிலிருந்து 1,800 பயணிகள் பயணத்தைத் தொடங்கினர். இந்த நிகழ்வு, ஒரு விரிவான சொகுசு சுற்றுலாப் பயணக் காலத்தின் தொடக்கமாக அமைந்தது. ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாத காலத்திற்கு, இந்தக் கப்பல் பயணங்களை மேற்கொள்ளும்.

  

சென்னை துறைமுக ஆணைய தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், சென்னை வந்த பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இப்பகுதியின் புகழ்பெற்ற விருந்தோம்பலை வெளிப்படுத்தும் விதமாக, சர்வதேசப் பயணிகளுக்கும், உள்நாட்டுப் பயணிகளுக்கும் இந்திய விருந்தோம்பலின் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தது. வரவேற்பின் ஒருபகுதியாக புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் கூடிய அதி நவீன சொகுசுப் பயணக் கப்பல் பயணிகள் முனையம் இன்று பயணிகளின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டது. எம்.வி. எம்பிரஸ் கப்பலில் இருந்து வந்த பயணிகள், இந்த முனையத்தின் சிறப்பான வசதிகளை அனுபவித்தனர். 4,103 சதுர மீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த முனையால் கட்டடம் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளது.

  

இதில் முழுமையான வெப்பக் காற்றோட்டம், மையக் குளிரூட்டல் வசதி, உயர் தொழில்நுட்ப பயணப் பெட்டி ஸ்கேனர்கள் உள்ளிட்ட மேம்பட்ட உயர்தர பாதுகாப்பு அமைப்புகள், நவீன பயணிகள் ஓய்வறைகள், வசதியாக ஏறி இறங்குவதற்காக இருபுறங்களிலும் நகரும் படிக்கட்டுகள், சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

 

இந்தக் கப்பல் இலங்கையின்

ஹம்பாந்தோட்டா, திரிகோணமலை,

காங்கேசன்துரை, போன்ற சர்வதேச துறைமுகங்களுக்கும், விசாகப்பட்டினம், புதுச்சேரி உள்ளிட்ட, முக்கிய உள்நாட்டு  துறைமுகங்களுக்கும் செல்லவுள்ளது.

 

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா வசதிகளுடன், சென்னை துறைமுகம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்சார் பாரம்பரியத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இத்துறைமுகம் உலகளாவிய கப்பல் சுற்றுலா வரைபடத்தில் சென்னை நகரத்தை வலுவாக நிலைநிறுத்தி வருகிறது.

 

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2275608) आगंतुक पटल : 78
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English