அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாராபூர் அணுமின் நிலையத்தை அணுசக்தித் துறை செயலாளர் டாக்டர் அஜித் குமார் மொஹந்தி பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 17 JUN 2026 4:39PM by PIB Chennai

அணுசக்தித் துறை செயலாளரும், அணுசக்தி ஆணைய தலைவருமான டாக்டர் அஜித் குமார் மொஹந்தி, இன்று தாராபூர் அணுமின் நிலையத்தைப் பார்வையிட்டார். அப்போது, உலகின் மிகப் பழமையான இரட்டை அணு உலைகளின் செயல்பாட்டுக் காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதை அவர் ஆய்வு செய்தார்.

டாக்டர் மொஹந்தி, இந்திய அணுமின் கழகத்தின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், பணியாளர்களுடன் கலந்துரையாடினார். இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பான, நம்பகமான, திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்வதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.

அப்போது பேசிய டாக்டர் மொஹந்தி, உலகின் மிகப் பழமையான அணு உலைகளான தாராபூர் அணுமின் நிலையத்தின் அலகு 1 மற்றும் 2-ன் தொடர்ச்சியான செயல்பாடு, பல தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள், இயக்குபவர்களின் அர்ப்பணிப்புக்கும், நமது ஒழுங்குமுறை, தொழில்நுட்பத் திறன்களின் முதிர்ச்சிக்கும் சான்றாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். பத்தாண்டு காலத்திற்கு அதன் செயல்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டது என்பது தொழில்நுட்பத்தைப் பெறுவது என்ற நிலையிலிருந்து தொழில்நுட்பத் தன்னிறைவை நோக்கி இந்தியா அடைந்துள்ள மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக கூறினார்.

இந்தியாவின் அணுசக்திப் பயணத்தில் தாராபூர் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்றும், 1969-ல் செயல்பாட்டிற்கு வந்த  இரண்டு அலகுகளும், நாட்டில் வணிக ரீதியான அணுமின் உற்பத்தியின் தொடக்கத்தைக் குறித்ததாக அவர் தெரிவித்தார். அத்துடன், சோவியத் கூட்டமைப்புக்கு வெளியே ஆசியாவிலேயே அமைக்கப்பட்ட முதல் அணுமின் நிலையமாக தாராபூரை இவை நிலைநிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274057&reg=3&lang=1

****

TV/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2274244) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी