மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மத்தியப் பிரதேசத்தில் 9.5 கோடி பேர் மத்தியப் பிரதேச குடும்ப அடையாள அட்டையை டிஜிலாக்கரில் அணுகலாம்
प्रविष्टि तिथि:
17 JUN 2026 2:25PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தில் சுமார் 9.5 கோடி பேர் தற்போது டிஜிலாக்கரில் தங்களுடைய மத்தியப் பிரதேச குடும்ப அடையாள அட்டையை அணுகலாம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் ஆவணத் தொகுப்பான இது, மத்தியப் பிரதேச அரசால் வழங்கப்பட்ட சான்றை இணைத்துள்ளது. இதன் மூலம் சரிபார்க்கப்பட்ட நகல் ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைக்கிறது.
மக்கள் தங்களுடைய மத்தியப் பிரதேச குடும்ப அடையாள அட்டையை டிஜிலாக்கரில் நான்கு எளிய வழிமுறைகளில் அணுகலாம்.
1. டிஜிலாக்கர் செயலி அல்லது digilocker.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
2. Issued Documents என்ற பகுதியை அணுகவும், Samagra / Family ID Madhya Pradesh என்று பதிவிட்டு தேடவும்.
3. தேவையான விவரங்களை பதிவிட்டு ஒப்புதல் அளிக்கவும்.
4. ஆவணத்தைப் பெற்றுக்கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273954®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2274176)
आगंतुक पटल : 6