வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2026 ஏப்ரல், மே காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 14.66% வளர்ச்சி
प्रविष्टि तिथि:
15 JUN 2026 4:37PM by PIB Chennai
நாட்டின் ஏற்றுமதி 2026-27-ம் நிதியாண்டின் ஏப்ரல், மே காலகட்டத்தில் 14.66% அதிகரித்துள்ளது.
2025-26 ஏப்ரல்-மே காலகட்டத்தில் 141.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஒட்டுமொத்த ஏற்றுமதியுடன் (சரக்குகள், சேவைகள்) ஒப்பிடுகையில் 2026-27 ஏப்ரல்-மே காலகட்டத்தில் 162.69 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 14.66% வளர்ச்சி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல்-மே 2025-26 காலகட்டத்தில் 76.59 பில்லியன் டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு, ஏப்ரல்-மே 2026-27 காலகட்டத்தில் 88.91 பில்லியன் டாலராக உயர்ந்து, 16.09% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மே 2026-ல் சரக்கு ஏற்றுமதி வளர்ச்சியின் முக்கிய காரணிகளாக, பொறியியல் பொருட்கள், கரிம - கனிம வேதிப்பொருட்கள், மின்னணுப் பொருட்கள், ரத்தினக்கற்கள், ஆபரணங்கள் ஆகியவை இருந்தன.
பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மே 2025-ல் 9.89 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மே 2026-ல் 12.31 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.
மே 2025-ல் 4.57 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மே 2026-ல் 5.10 பில்லியன் அமெரிக்க டாலராக, மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 11.62% அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273044®=3&lang=1
***
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2273176)
आगंतुक पटल : 16