சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் 2026, ஜூன் 15 முதல் 17, 2026 வரை புது தில்லியில் தொடங்குகிறது

प्रविष्टि तिथि: 14 JUN 2026 7:43PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில், தன்னாட்சி அமைப்பான மை பாரத் மூலம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், வளர்ச்சியடைந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் 2026- ஜூன் 15 முதல் 17, 2026 வரை புதுதில்லியில் நடத்தத் தயாராக உள்ளது. முந்தைய பதிப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த முதன்மை முயற்சியானது ஜனநாயக செயல்முறைகளில் இளைஞர்களின் ஈடுபாட்டைப் புதிய கோணத்தில் அணுகுகிறது. இது இளைஞர்களுக்கு ஆளுகை, கொள்கை விவாதம் மற்றும் நாடாளுமன்றச் செயல்பாடு ஆகியவற்றில் நேரடிப் புரிதலை வழங்குகிறது.

இந்தத் திட்டம் மூன்று படிப்படியான கட்டங்களாக நடைபெறுகிறது, ஒவ்வொன்றும் இளைஞர்களின் பங்கேற்பை ஆழப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது:

மாவட்ட ஒருங்கிணைப்புச் சுற்றுகள்:

* 'அவசரநிலையின் 50 ஆண்டுகள்: இந்திய ஜனநாயகத்திற்கான பாடங்கள்' என்ற தலைப்பில் 757 ஒருங்கிணைப்புப் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. இது இந்த உரையாடலை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்றது.

* ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் முதல் 5 இடங்களைப் பிடித்த பங்கேற்பாளர்களுக்கு மாநில அளவிலான சுற்றுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

மாநில அளவிலான சுற்றுகள்:

* அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில சட்டமன்றங்கள் மற்றும் முக்கிய அரசு அரங்குகளில் நடத்தப்பட்ட இந்தச் சுற்றுகள், 'மத்திய பட்ஜெட் 2026: இளைஞர் சக்தியால் இயக்கப்படும் பட்ஜெட்' என்ற தலைப்பில் பிராந்திய ஆளுகைக் கட்டமைப்புகள் குறித்த அர்த்தமுள்ள பார்வையை இளைஞர்களுக்கு வழங்கின.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

முதல் பரிசு

பெயர்: காவியா

முகவரி: 9/66, அத்திக்கடை, தெற்கு சூரங்குடி அஞ்சல், ஏத்தாமொழி, கன்னியாகுமரி மாவட்டம்

இரண்டாம் பரிசு

பெயர்: ஸ்ரீநிதி

1/44, D2 , வள்ளலார் ஐடிஐ அருகில், கோட்டையூர் அஞ்சல், சிவகங்கை மாவட்டம்

மூன்றாம் பரிசு

பெயர்: தேவதர்ஷினி ரூபநாதன்

முகவரி: 28, கேகே நகர், மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டம்

* மாநில சபாநாயகர்கள் மற்றும் ஆளுநர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வுகள், பொது விவாதங்களில் இளைஞர்களின் குரல்களின் மதிப்பை உயர்த்தின.

தேசியச் சுற்று (ஜூன் 1517, 2026):

* அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சிறந்து விளங்கும் பிரதிநிதிகள் மாபெரும் இறுதி நிகழ்விற்காக புது தில்லியில் ஒன்றுகூடுகின்றனர்.

* தேசியச் சுற்றில் பலதரப்பட்ட செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன:

* தொடக்கவுரை: ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒரு பிரதிநிதி, 'நாரி சக்தி வந்தன்: அனைவரையும் உள்ளடக்குதலை ஊக்குவித்தல்' மற்றும் 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' ஆகிய தலைப்புகளில், தலா 3 நிமிடங்கள் உரையாற்றுவார்.

* கேள்வி நேரம்: உண்மையான நாடாளுமன்ற பாணியில், அணிகள் கேள்விகளை எழுப்பி பதிலளிக்கும் கேள்வி கேட்க 3 நிமிடங்கள், பதிலளிக்க 3 நிமிடங்கள் இதன் மூலம் ஒரு கூட்டுத் தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொள்ளலாம்.

* சிறப்புப் பயிலரங்கம்: ஒரு புகழ்பெற்ற ஆளுமை, சொற்பொழிவு மற்றும் பொதுப் பேச்சு குறித்த சிறப்புப் பயிலரங்கை நடத்தி, பங்கேற்கும் இளைஞர்களின் தலைமைத்துவத் திறனை மேம்படுத்துவார்.

* பிரதமர் சங்கராலயா பயணம்: பிரதிநிதிகள், பிரதமர் சங்கராலயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தின் மூலம் இந்தியாவின் வளமான அரசியல் பாரம்பரியத்தையும் தலைமைத்துவ மரபையும் ஆராய்வார்கள். புதிய நாடாளுமன்றப் பயணம்: இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் எழுச்சியூட்டும் சுற்றுப்பயணம், பங்கேற்பாளர்களுக்கு நாட்டின் ஜனநாயகத்தின் இருக்கையுடன் நேரடித் தொடர்பை வழங்குகிறது.

* விருது வழங்கும் விழா: இளம் பங்கேற்பாளர்களின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், வளர்ச்சியடைந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் 2026 விருதுகள் ஜூன் 17 அன்று வழங்கப்படும்.

வளர்ச்சியடைந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம் என்பது ஒரு திட்டத்தை விட மேலானது இது இந்திய இளைஞர்களின் ஆற்றல், எண்ணங்கள் மற்றும் விருப்பங்களை தேசிய உரையாடலுக்குள் கொண்டு செல்லும் ஒரு இயக்கமாகும். மத்திய அரங்கில் உருவாக்கப்பட்ட தீர்மானங்கள் இந்த மூன்று நாட்களுக்குப் பிறகும் எதிரொலித்து, வளர்ச்சியடைந்த பாரதம் 2047- நோக்கிய இந்தியாவின் பயணத்தை ஒரு தலைமுறை இளம் தலைவர்கள் பொறுப்பேற்க ஊக்கமளிக்கும்.

வளர்ச்சியடைந்த பாரதம் இளைஞர் நாடாளுமன்றம், 2026 ஜூன் 16 அன்று  நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில்  மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களால் தொடங்கி வைக்கப்படும். மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுகா மாண்டவியா அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

***

TV/RJ


(रिलीज़ आईडी: 2272760) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English