சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பொறுப்புத் துணைவேந்தராக, மூத்த பேராசிரியர் சுலோச்சனா சேகர் பொறுப்பேற்றுக்கொண்டார்
प्रविष्टि तिथि:
12 JUN 2026 8:16PM by PIB Chennai

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தராக, அங்கு மூத்த பேராசிரியராகப் பணியாற்றி வரும் சுலோச்சனா சேகர் (ஜூன் 12) பொறுப்பேற்றுக்கொண்டார்.
துணைவேந்தராக இருந்த பேராசிரியர் கிருஷ்ணனின் பதவிக்காலம் 11 ஜூன் அன்று முடிவடைந்த அடுத்து , மூத்த பேராசிரியர் சுலோச்சனா சேகர், பொறுப்புத் துணைவேந்தராக பதவி ஏற்றுக்கொண்டார்.
நகர்ப்புற புவியியல் மற்றும் புவிசார் அறிவியல் துறையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வல்லுநரான பேராசிரியர் சுலோச்சனா சேகர், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், புனே தேசிய பாதுகாப்பு அகாடமி, புனே பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடக மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
பேராசிரியர் சுலோச்சனா சேகர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக பொறுப்பேற்பதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பொறுப்பு பதிவாளர், உள்தர உறுதி பிரிவு இயக்குனர் மற்றும் தேசிய மதிப்பு மற்றும் தரச் சான்று குழுவின் மதிப்பீட்டாளர் என பல்வேறு உயரிய நிர்வாக பொறுப்புகளை திறன்பட செயலாற்றியவர் என்று குறிப்பிடத்தக்கது.
அவருக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் இரா. திருமுருகன், நிதி அதிகாரி கிரிதரன் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
*
TV/SE
(रिलीज़ आईडी: 2272331)
आगंतुक पटल : 81
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English