சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி பிராந்தியத்தில், மெட்ராஸ் ஏற்றுமதி செயல்பாட்டு மண்டலம் (மெப்ஸ்) - சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் 12 ஆண்டுகால வளர்ச்சி குறித்த சிறப்பம்சங்கள்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 7:40PM by PIB Chennai

மத்திய அரசின் வர்த்தகத் துறையின் கீழ் செயல்படும் மெப்ஸ் - சிறப்புப் பொருளாதார மண்டலம், தமிழ்நாடு, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியத்தில் ஏற்றுமதி, முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

  

இந்த பிராந்தியத்தில் தற்போது 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன. இது நாட்டிலேயே மிக அதிக (மொத்தம் உள்ள 62 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில்) எண்ணிக்கையாகும். மேலும் 3 மண்டலங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. 749 செயல்பாட்டு சிறப்புப் பொருளாதார மண்டல அலகுகள், 288 ஏற்றுமதி சார்ந்த அலகுகளைக் கொண்டுள்ள இப்பிராந்தியம், உலகின்  பொருளாதார மையமாக இந்தியா நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

  

முக்கியச் செயல்பாட்டு விவரங்கள்:

* 2025-26 நிதியாண்டின் ஏற்றுமதி: ரூ 2.22 லட்சம் கோடி

* மொத்த வேலைவாய்ப்பு: 6.26 லட்சம்

* மொத்த முதலீடு: ரூ 82,844 கோடி

தமிழ்நாடு, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி பிராந்தியத்தில், குறிப்பிடத்தக்க வகையில், நீடித்த பொருளாதார வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. வருடாந்திர ஏற்றுமதி 226.7% என்ற அளவில் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. 2014-15-ம் நிதியாண்டில், ரூ. 68,104 கோடியாக இருந்த ஏற்றுமதி, 2025-26-ம் நிதியாண்டில், சாதனை அளவாக ரூ. 2.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த ஏற்றுமதி வளர்ச்சியுடன், வலுவான மூலதன அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. மொத்த முதலீடுகள் ரூ. 41,489 கோடியிலிருந்து ரூ. 82,844 கோடியாக உயர்ந்து இரட்டிப்பு வளர்ச்சியை (2 மடங்கு) எட்டியுள்ளன. குறிப்பாக, இந்த முதலீடுகள் ரூ. 74,165.75 கோடி மதிப்பிலான வலுவான உள்நாட்டு முதலீட்டு அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இதனுடன் ரூ. 8,677.9 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடும் இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271303&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2271439) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English