இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பங்குகளை சான்லாம் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் (மொரிஷியஸ்) லிமிடெட் நிறுவனம் வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 4:55PM by PIB Chennai

ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பங்குகளை  சான்லாம் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் (மொரிஷியஸ்) லிமிடெட் நிறுவனம் வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கை மூலம்ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 2.80%-சான்லாம் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் (மொரிஷியஸ்) லிமிடெட் நிறுவனம்ஒரு முன்னுரிமை வெளியீட்டின் மூலம் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மொரிஷியஸில் பதிவுசெய்யப்பட்ட சான்லாம் எமர்ஜிங் மார்க்கெட்ஸ்  லிமிடெட் நிறுவனம்தென்னாப்பிரிக்காவின் சான்லாம் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இது ஸ்ரீராம் குழுமத்தின்உத்திசார் முதலீட்டாளாராகவும்மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு ஸ்ரீராம் குழும நிறுவனங்களில் முதலீடுகளையும் கொண்டுள்ளது.

ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல்ஆயுள் காப்பீட்டுத் துறையில் பல்வேறு வகையான தயாரிப்புகளை உருவாக்கி சந்தைப்படுத்துதல்பங்குப பரிவர்த்தனைகளுடன் கூடிய  ஆயுள் காப்பீட்டுத் தயாரிப்புகள், 1938-ம் ஆண்டு காப்பீட்டுச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட பிற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும். 

***

(Release ID 2271195)

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2271368) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी