சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உலகளவில், மனித மூளை குறித்த ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், ஐஐடி மெட்ராஸ் '3-வது பிரிக்ஸ் நரம்பியல் அறிவியல் கருத்தரங்கை நடத்தியது
प्रविष्टि तिथि:
08 JUN 2026 2:48PM by PIB Chennai
மனித மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், ஐஐடி மெட்ராஸ் '3-வது பிரிக்ஸ் நரம்பியல் அறிவியல் கருத்தரங்கை நடத்தியது. ஜூன் 5 முதல் 7 வரை நடைபெற்ற இந்த கருத்தரங்கு இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த கருத்தரங்கில், அறிவியல் அமர்வுகள், சிறப்புச் சொற்பொழிவுகள், சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தின் 'மனித மூளைத்தண்டு அட்லஸ்' குறித்த முக்கிய தரவு வெளியீடு ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் திரு விக்ரம் மிஸ்ரி, "பிரச்சனைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், சில தீர்வுகள், புதிய சிக்கல்களை உருவாக்கும் சூழலும் ஏற்படுகிறது என்று கூறினார். சர்வதேச அளவில் இத்தகைய முயற்சிகளில், ஒன்றிணைந்து செயல்படும் உணர்வை 'பிரிக்ஸ்' அமைப்பு அடையாளப்படுத்துகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கில், காணொளி வாயிலாக உரையாற்றிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், "சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம், பல்வேறு நிறுவனங்கள், நாடுகள், துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வதற்கான அமைப்பாகத் திகழ்கிறது என்று கூறினார்.
இந்த மையத்தின் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் பேசுகையில், "நரம்பியல் அறிவியல் போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையில், கடினமான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கும், சாதனை படைப்பதற்கும், பல்வேறு நாடுகள், துறைகளைச் சேர்ந்த, நிபுணர்களைக் கொண்ட குழுக்களின் பங்களிப்பு அவசியம்," என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் திரு விக்ரம் மிஸ்ரி, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி காமகோடி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் திரு கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
***
SS/SV/KR
(रिलीज़ आईडी: 2270279)
आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English