சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய தலைநகர் பகுதி முழுவதும் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் தீவிர ஆய்வு
प्रविष्टि तिथि:
06 JUN 2026 6:45PM by PIB Chennai
தேசிய தலைநகர் பிராந்தியம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விவாதிக்கும், காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் அமலாக்கப் பணிக்குழுவின் 132வது கூட்டம் நேற்று (05.06.2026) நடைபெற்றது. இதில் 11.05.2026 முதல் 29.05.2026 வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஆய்வுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
19 நாட்கள் கொண்ட இந்தக் காலத்தில், காற்று தர மேலாண்மை ஆணையத்தின் பறக்கும் படைக் குழுக்கள் மொத்தம் 245 ஆய்வுகளை மேற்கொண்டன. கட்டுமானம், இடிப்பு தளங்களில் 31 ஆய்வுகள், தொழில்துறைப் பிரிவில் 74 ஆய்வுகள், டீசல் ஜெனரேட்டர் தொடர்பான 140 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானம், இடிப்புத் தளங்களில் இருந்து 21, தொழில்துறைப் பிரிவிலிருந்து 25, டீசல் ஜெனரேட்டர் தொடர்பாக 41 உட்பட, மொத்தம் 87 விதிமீறல்கள் பதிவாகியுள்ளன. ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில், 11 அலகுகள்/திட்டங்களை மூடுதல், 33 டீசல் ஜெனரேட்டர் தொகுப்புகளுக்கு சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு, கண்காணிப்பை வலுப்படுத்துதல், செயல்படுத்தும் முகமைகளுக்கு இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பு, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் ஆகியவற்றின் அவசியத்தை ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தொழிற்சாலைக் கழிவு வெளியேற்றங்கள், டீசல் ஜெனரேட்டர் தொகுப்புகள், கட்டுமானம், இடிப்புப் பணிகள், சாலைத் தூசி மேலாண்மை உள்ளிட்ட முன்னுரிமை அம்சங்களில் ஆய்வுகளை வலுப்படுத்துதல், அமலாக்க நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் ஆகியவற்றிலும் தொடர்ச்சியான கவனம் செலுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269842®=3&lang=1
(Release ID :2269842)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2269868)
आगंतुक पटल : 17