சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

உயிரி பன்முகத் தன்மை தொடர்பான பிரத்யேக விருப்பத் தகுதிச் சான்றிதழ் திட்டம் அறிமுகம்

प्रविष्टि तिथि: 06 JUN 2026 2:13PM by PIB Chennai

மத்திய அரசின் சுற்றுச்சூழல், அமைச்சகம், தேசிய உயிரி பன்முகத்தன்மை ஆணையம் (என்பிஏ) இந்தியத் தரக் கவுன்சில், இந்தியாவில் செயல்படும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து, 'அணுகல், பலன் பகிர்வு ஆகியவற்றுக்கான அங்கீகாரத்திற்கான விருப்பத் தகுதிச் சான்றிதழ் திட்டத்தை (VCS-I-ABS) தொடங்கியுள்ளன. இதன் மூலம், உயிரியல் பன்முகத்தன்மைக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள 196 நாடுகளில், அணுகல், பலன் பகிர்வு குறித்த பிரத்யேக விருப்பத் தகுதிச் சான்றிதழ் திட்டத்தைச் செயல்படுத்தும் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது.

 

அணுகல், பலன் பகிர்வு நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் இந்தியா உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முன்னோடி நாடாக உள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இணக்கச் சான்றிதழ்களில் சுமார் 60% இந்தியாவினுடையதாகும்.

 

இயல்பிலேயே விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த இத்திட்டம் (VCS-I-ABS), வணிக நிறுவனங்களுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம், அதற்கான விதிகள், அணுகல், பலன் பகிர்வு ஒழுங்குமுறைகள் போன்றவற்றுக்கு இணங்கச் செயல்படும் நிறுவனங்களுக்குச் இலச்சினை (logo), சான்றிதழ் ஆகியவை வழங்குவதன் மூலம் இது சாத்தியமாக்கப்படுகிறது.

     இந்தச் சின்னம் தேசிய, சர்வதேச சந்தைகளில் ஒரு தனித்துவமான அடையாளமாகத் திகழும். இது ஏபிஎஸ் விதிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதோடு, சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் சந்தையில் முன்னிலை வகிக்கவும் புதிய சந்தைகளை அணுகவும் உதவுகிறது.

 

 பல்லுயிர் பெருக்க நிதியளிப்பு, சமூக மேம்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றில் சந்தை சார்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் இந்தியா ஒரு உலகளாவிய முன்னோடியாகத் திகழ்வதை இத்திட்டம் வலுப்படுத்துகிறது. கூடுதல் தகவல்களுக்கு, secretary@nba.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2269744) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English