அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வினையூக்கியின் புதிய கட்டமைப்பு மாற்றத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 3:38PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பெங்களூரு நானோ மற்றும் மென்பொருள் அறிவியல் மைய விஞ்ஞானிகள், தண்ணீரை மின்னாற்பகுப்பு செய்து தூய்மையான பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கும் வினையூக்கியின் புதிய செயல்பாட்டு மாற்றத்தை வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர். மாலிப்டினம் கார்பைடு எனப்படும் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த வினையூக்கி, வேதிவினையின் போது எவ்வாறு தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் கட்டமைப்பைக் கொண்டு ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது என்பதை இந்த புதிய ஆய்வு மிகத் துல்லியமாக விளக்குகிறது.
ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகம், பெங்களூருவில் உள்ள இந்தோ-கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, வேதிவினையின் போது வினையூக்கியின் செயல்பாட்டு நிலை எவ்வாறு உருவாகிறது என்பதை நிரூபித்துள்ளது. இத்தகையக் கட்டுப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றம் வினையூக்கியின் செயல்திறனையும் நீடித்த நிலைத்தன்மையையும் கணிசமாக மேம்படுத்துகிறது. இது அடுத்த தலைமுறைக்கான குறைந்த செலவிலான அதிநவீன ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்ப வடிவமைப்புகளுக்குப் பெரிதும் உதவும். இந்த முக்கியமான ஆய்வுக் கட்டுரை புகழ்பெற்ற 'மெட்டீரியல்ஸ் ஹொரைசன்ஸ்' என்ற சர்வதேச அறிவியல் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268866®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2269041)
आगंतुक पटल : 15