தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்தியப் பிரதேசத் தொலைத்தொடர்பு வட்டத்திற்கு உட்பட்ட சாகர் மற்றும் ராய்கர் நகரங்களில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் ஆய்வு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2026 5:39PM by PIB Chennai
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மத்தியப் பிரதேசத் தொலைத்தொடர்பு வட்டத்திற்கு உட்பட்ட சாகர் மற்றும் ராய்கர் நகரங்களில் மொபைல் நெட்வொர்க் தரத்தை மதிப்பிடுவதற்கான கள ஆய்வை மேற்கொண்டது. நுகர்வோரின் விழிப்புணர்வுக்காக இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் அழைப்புகள் மற்றும் இணையச் சேவைகளின் நிகழ்நேர தரத்தை சரிபார்ப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும். டிராயின் போபால் மண்டல அலுவலக மேற்பார்வையில், கடந்த 2026 மார்ச் 16 முதல் 21-ஆம் தேதி வரை இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் 455.1 கிலோமீட்டர் தொலைவிற்கான நகர வீதிகள், 16 முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரயில் நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 9.7 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில் ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் விரிவாக சோதிக்கப்பட்டன. நெட்வொர்க் இணைப்பு கிடைக்காத இடைவெளி, அழைப்பு துண்டிக்கப்படும் விகிதம், அழைப்பின் போது ஏற்படும் மௌன இடைவெளி மற்றும் இணையப் பதிவிறக்க/பதிவேற்ற வேகம் போன்ற முக்கிய அளவுகோல்கள் துல்லியமாக மதிப்பீடு செய்யப்பட்டன.
இணைய வேகத்தைப் பொறுத்தவரை, சாகர் மற்றும் ராய்கர் ஆகிய இரு நகரங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்ச சராசரி பதிவிறக்க வேகத்தை வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக, இந்த ஆய்வின் விரிவான முடிவுகள் அந்தந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிரப்பட்டுள்ளன. பொதுமக்கள் முழுமையான அறிக்கையை டிராயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.trai.gov.in) தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268052®=3&lang=1
Release ID: 2268052
****
TV/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2268116)
வருகையாளர் எண்ணிக்கை : 10