மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் இந்தியத் தலைமையின் கீழ் மேம்பட்ட கால்நடைத் தொழில்நுட்பம், தீவன அமைப்புகள் குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை

प्रविष्टि तिथि: 01 JUN 2026 4:56PM by PIB Chennai

2026-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கும் நிலையில், மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை, பிரிக்ஸ் வேளாண்மைச் செயற்குழுவின் கீழ் 'மேம்பட்ட கால்நடைத் தொழில்நுட்பம் மற்றும் தீவன அமைப்புகள்குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையை ஜூன் 1, 2026 அன்று புதுதில்லி கிரிஷி பவனிலிருந்து காணொலி வாயிலாக நடத்தியது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், ஊரக வாழ்வாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஊட்டச்சத்துப் பாதுகாப்பில் கால்நடைத் துறையின் பங்கை வலியுறுத்தினார். குறைந்த உற்பத்தித் திறன், கால்நடை நோய்கள், தீவனப் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் ஆகிய சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகளிடையே கூட்டு நடவடிக்கை அவசியம் என்றார். மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல், விவசாயிகளை மையப்படுத்திய கால்நடைத் துறையை உருவாக்க நவீன தொழில்நுட்பங்கள், நிலையான தீவன அமைப்புகளின் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் டாக்டர் மீனேஷ் ஷா, கால்நடைப் பராமரிப்புத் துறைச் செயலாளர் திரு நரேஷ் பால் கங்வார் ஆகியோர் அறிவியல்பூர்வமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை விளக்கினர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பிரேசில், சீனா, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் தங்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

உலகளாவிய உணவு மற்றும்  ஊட்டச்சத்துப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைத் துறையின் நிலையான வளர்ச்சிக்காகத் தொழில்நுட்பம், கூட்டு உத்திகளைப் பயன்படுத்துவதற்கும் பிரிக்ஸ் நாடுகள் தங்களின் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை இந்தப் பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் :
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267550&reg=3&lang=1

 

 

***

(Release ID: 2267550)
SS/SE/KR


(रिलीज़ आईडी: 2267785) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी