ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 7:57PM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவம், இயற்கை தயாரிப்புகளில் இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஆயுஷ் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு  பிரதாப்ராவ் ஜாதவ், இந்தத் தொலைநோக்குக் கூட்டாண்மைக்காக இரு அமைப்புகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆயுர்வேதம், மூலிகைகள், இந்திய நறுமணப் பொருட்களை உலகளவில் ஒருங்கிணைப்பதில் இக்கூட்டாண்மை முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள "ஸ்பைஸ் அண்ட் ஹீல்" என்ற முன்முயற்சி, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் இயற்கை மருத்துவத் தீர்வுகளில் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்தும் ஆற்றல் கொண்டது என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘தற்சார்பு இந்தியா’, ‘உள்நாட்டு தயாரிப்புகளுக்குக் குரல் கொடுப்போம்’  மற்றும் ‘இந்தியாவில் குணப்படுத்துங்கள்’ ஆகிய தொலைநோக்குப் பார்வைகளுக்கு இணங்க இத்திட்டம் அமைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுமதி வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாயிகளின் வருமான உயர்வுக்கான புதிய வழிகள் திறக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தில் ஆயுஷ் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின்  தலைவர் டாக்டர் அனுராக் சர்மா, இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் செயலாளர் திரு எம் எஸ் மணிவண்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் ஆயுஷ் தயாரிப்புகள், மூலிகைச் சாறுகள், மதிப்பு கூட்டப்பட்ட நறுமணப் பொருட்களின் தரம், சர்வதேச சந்தை மேம்பாடு, ஆராய்ச்சிப் பணிகள் கூட்டாக மேற்கொள்ளப்படும்..

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265130&reg=3&lang=1


***

(Release ID: 2265130)

SS/EA /KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265863) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी