இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய அறிவியல் கழகத்தின் தலைமையில்,செமிகண்டக்டர் பயிற்சித் திட்டம் நாடு முழுவதும் பழங்குடியின இளைஞர்களின் பங்கேற்பில் பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 4:14PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, இளையோர் விவகாரங்கள் துறையின் கீழ் மை பாரத் ஆதரவுடன் செயல்படுத்தும் பழங்குடியின மாணவர்களுக்கான செமிகண்டக்டர் பயிற்சித் திட்டம், நடப்பாண்டில், இரண்டாம் கட்டச் செயலாக்கத்தின் போது, இளைஞர்களைச் சென்றடைவதிலும், அவர்களது பங்கேற்பிலும் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை எட்டியுள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும் இந்தத் திட்டம், பழங்குடியின மாணவர்கள், ஆசிரியர்களுக்கு செமிகண்டக்டர் உருவாக்கம், நானோபொறியியல் செயல்முறைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில், இணையவழி சுய கற்றல் தொகுதி, இந்திய அறிவியல் கழகத்தின் ஆசிரியர்களின் விரிவுரைகள், இந்த பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான இலவசப் பயணம், தங்குமிடம், உணவு ஆகியவற்றுடன், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் வளாகத்தில் நடைபெறும் 10 நாள் உறைவிடப் பயிற்சித் திட்டம் ஆகியவை அடங்கும்.

நாடு முழுவதும் உள்ள மை பாரத் களப் பணியாளர்கள், மாநில இயக்குநர்கள், மாவட்ட இளைஞர் அலுவலர்கள், தன்னார்வலர்கள் போன்ற அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட விரிவான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் அணிதிரட்டல் முயற்சிகளின் காரணமாக, திட்டத்தின் தற்போதைய கட்டத்தில், குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265415&reg=3&lang=1

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265602) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी