சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

முதன்மை தொலைத்தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 2:21PM by PIB Chennai

தொலைத்தொடர்பு துறை தமிழ்நாடு வட்டம், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய பிஎஸ்என்எல் நிறுவனத்தின் துணைநிலை மாற்றத்திற்கான பகுதிகளைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, ஜூன் 19, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமை இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன், இணை தகவல் கட்டுப்பாடு கணக்கு அதிகாரி (ஓய்வூதியம்), தமிழ்நாடு வட்டம் சென்னை 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது "jtccapen.ccatn[at]nic[dot]in” என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். மேலும், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர் உதவி மையத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்ப்பு பெட்டியிலும் சமர்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 08 .06. 2026 மாலை 06.00 வரையாகும். ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்களது குறைகளை கடைசித் தேதிக்கு முன்னதாகவே சமர்ப்பித்து, இதர அனைத்து வழிமுறைகளையும் நிறைவு செய்த பிறகு, ஓய்வூதியதாரர்களின் நீண்டகால குறைகளுக்குத் தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருந்தால் மட்டுமே, இந்த குறைதீர்ப்பு முகாமில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதர அனைத்து வழிமுறைகளையும் நிறைவு செய்யாமல், விரைவான பரிசீலனைக்காக இந்த முகாமில் முதல்முறையாக சமர்ப்பிக்கப்படும் குறைகள் தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. எந்தவொரு நீதிமன்றம், கொள்கை/அமைப்பு தொடர்பான குறைகள், முதல் முறையாக சமர்ப்பிக்கப்படும் குறைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மத்திய அகவிலைப்படி - தொழில்துறை அகவிலைப்படி சார்பீடு, டிஜிட்டல் முறையில் ஓய்வூதியம் வழங்குவதைக்கான ஆணை, ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டைகள், ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றம், ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குறைகள் போன்றவை இந்த ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமின் வரம்பிற்குள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. குறைகளுக்கான படிவத்தில் போதுமான விவரங்கள் குறிப்பிடாத அம்சங்கள் இந்த முகாமில் பரிசீலிக்கப்படமாட்டாது. குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதிக்குள் (மாலை 06.00 வரை) கிடைக்கப் பெறாத விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு  ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள்/ஓய்வூதியம் பெறுவோர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமில்  கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் ஓய்வூதியதாரர்களின் குறைகளை, ஓய்வூதியதாரர்கள் இல்லாத நிலையில் முன்வைக்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும் படிப்பரிவில்லாத ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் / சிறு வயதினராக இருந்தால், அத்தகைய ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளை முன்வைக்க அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியர் சங்கத்தின் பிரதிநிதிக்கு அனுமதி வழங்கப்படும்.

அனைத்து குறைகளும் குறை தீர்வு மன்ற தேதிக்கு முன்னர் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்படும். இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளமான www.cgca.gov.in/ccatn -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து குறைகளை சமர்ப்பிப்பதற்கான படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம். இந்த குறைதீர்ப்பு முகாமில் பரிசீலிக்கபட்ட குறைகளின் பட்டியல் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் நேரம், கூட்டத்திற்கான இணைய இணைப்பு பின்னர் தெரிவிக்கப்படும்.

***

SS/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265454) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English