சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சிஐஎஸ்எஃப் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி ஓட்டும் நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAY 2026 4:30PM by PIB Chennai

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம்  ராஜாதித்ய சோழன் மண்டலப் பயிற்சி மையத்தின் தொழிலக பாதுகாப்பு படை  வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து, 'ஃபிட் இந்தியா' இயக்கத்தின் கீழ், மிதிவண்டி ஓட்டும் நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பயிற்சி மையத்தின் டி..ஜி/முதல்வர் திரு. மித்லேஷ் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்இந்த நிகழ்வில், பயிற்சி மைய துணை முதல்வர் திரு. நித்தேஷ் குமார், பிற  அதிகாரிகள் உட்பட சுமார் 100 வீரர்கள் பங்கேற்றனர். விளையாட்டு மனப்பான்மை, ஒற்றுமை மற்றும் உடற்தகுதியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், வீரர்கள் மிதிவண்டியில் தக்கோலம் கிராமத்தின் வழியாகச் சென்று உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினர்.

  

  

***

TV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264770) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English