மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் மிசோரம் மாநிலம் அய்சாலில் வடகிழக்கு பிராந்திய ஆய்வுக் கூட்டம்

प्रविष्टि तिथि: 24 MAY 2026 11:17AM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் (என்கிற) லாலன் சிங் தலைமையில், மே 25 அன்று மிசோரமின் அய்சாலில் வடகிழக்கு பிராந்திய மறுஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர்கள் திரு. எஸ்.பி. சிங் பாகல், திரு. ஜார்ஜ் குரியன் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இத்துறைகளின் வளர்ச்சி மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படும். நிகழ்வில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு படம், 'மிசோ கஃபே' மற்றும் பல்பொருள் பால் கூட்டுறவு சங்கங்களின் கிராம அளவிலான கணக்கெடுப்பு ஆகியவை தொடங்கி வைக்கப்படவுள்ளன.

மேலும், 'வளர்ச்சியடைந்த இந்தியா' இலக்கை நோக்கி, வடகிழக்கு பிராந்தியத்தில் சுமார் ரூ.32.15 கோடி மதிப்பிலான முக்கிய மீன்வளத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு திட்டப் பயன்களை  வழங்குகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264702&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2264762) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी