ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சிலிகுரியில் நடைபெற்ற 19-வது வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமன ஆணைகளை மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் வழங்கினார்
प्रविष्टि तिथि:
23 MAY 2026 5:04PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற 19-வது வேலைவாய்ப்பு முகாமின் ஒரு பகுதியாக, சிலிகுரியில் இன்று பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான், புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு, முறைப்படி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டைக் கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிலிகுரி வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 82 விண்ணப்பதாரர்களுக்கு, பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் உள்ள பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ரயில்வே, அஞ்சல் துறை, பாதுகாப்புத் துறை, நிதிச் சேவைகள் துறை மற்றும் இந்திய உணவுக் கழகம் ஆகியவற்றில் உள்ள பணியிடங்கள் இந்த நியமனங்களில் அடங்கும்.
நாடு தழுவிய இந்த வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக, 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264538®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2264587)
आगंतुक पटल : 52