சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தாம்பரத்தில் ஜூன் 15 அன்று அஞ்சலக குறைதீர்ப்பு முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAY 2026 8:10PM by PIB Chennai

அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் தாம்பரம் கோட்ட அலுவலகத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

அஞ்சலக முதுநிலை கண்காணிப்பு அலுவலம், தாம்பரம் கோட்டம், சென்னை 600 045 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சல் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளரால் இந்த முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த குறை தீர்ப்பு முகாமில் அஞ்சல் துறை சார்ந்த தயாரிப்புகள் மற்றும் தேவைகள் குறித்த தனிப்பட்ட குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

புகார் என்பது தபாலில் அனுப்பப்பட்ட பொருளைப் பற்றியது என்றால், அந்தப் புகார் அஞ்சலிடப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவரின் / பெறுபவரின் முழு முகவரி, தேதியுடன் கூடிய ரசீது எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் பணவிடை, மதிப்புமிக்க பார்சல், காப்பீடு செய்யப்பட்ட மற்றும் விரைவு தபால் பொருட்கள் என்றால் பதிவு செய்யப்பட்ட அலுவலக விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

சேமிப்புத் திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களாக இருந்தால் கணக்கு எண் / பாலிசி எண், பெயர் மற்றும் டெபாசிட் செய்தவரின் முழு முகவரி, அஞ்சலகப் பெயர், தபால் துறைக்கு அனுப்பப்பட்ட தகவல் விவரம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள் குறித்து ஏற்கனவே அஞ்சல் அலுவலகங்களில் தெரிவித்து அதற்கு தீர்வுகாணப்படாத நிலையில், இந்த குறைதீர்ப்பு முகாமில் தெரிவிக்கலாம். புதிய புகார்கள் இந்த குறைதீர்ப்பு முகாமில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை தபால் மூலம் அனுப்பலாம். தனியார் அஞ்சல் சேவை மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அஞ்சல் உறை மேல் குறைதீர்ப்பு முகாம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் 2026 ஜூன்  10-ம் தேதிக்குள் தங்கள் குறைகள் குறித்த தபால்களை அனுப்ப வேண்டும். 

*

TV/SV/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2264332) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English