இந்திய போட்டிகள் ஆணையம்
ரெஸ்டாரன்ட் பிராண்ட்ஸ் ஆசியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கை, லெனக்சிஸ் ஃபூட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆயுஷ் அகர்வால் டிரஸ்ட், இன்ஸ்பிரா ஃபூட்வொர்க்ஸ், ஆயுஷ் மதுசூதன் அகர்வால், இன்ஸ்பிரா அக்ரோ டிரேடிங் எல்எல்சி ஆகிய நிறுவனங்கள் கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 7:44PM by PIB Chennai
லெனக்சிஸ் ஃபூட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் (எல்எஃப்பிஎல்), ஆயுஷ் அகர்வால் டிரஸ்ட் (ஏஏடி), இன்ஸ்பிரா ஃபூட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஐஎஃப்பிஎல்), ஆயுஷ் மதுசூதன் அகர்வால் (ஏஎம்ஏ), இன்ஸ்பிரா அக்ரோ டிரேடிங் எல்எல்சி (ஐஏடிஎல்) ஆகிய நிறுவனங்கள், ரெஸ்டாரன்ட் பிராண்ட்ஸ் ஆசியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட அளவிலான பங்குகளைக் கையகப்படுத்துவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த இணைப்பு, பங்கு சந்தாக்கள், உத்தரவு சந்தாக்கள், பங்கு கொள்முதல், ஒரு திறந்த சலுகை உள்ளிட்ட பல்வேறு படிநிலைகளின் மூலம், எல்எஃப்பிஎல், ஏஏடி, ஐஎஃப்பிஎல், ஏஎம்ஏ, ஐஏடிஎல் ஆகிய நிறுவனங்களால் இலக்கு நிறுவனத்தின் (ரெஸ்டாரன்ட் பிராண்ட்ஸ் ஆசியா லிமிடெட் ) ஒரு குறிப்பிட்ட பங்கை கையகப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது.
ஆணையத்தின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263414®=3&lang=1
***
SS/BR/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2264026)
வருகையாளர் எண்ணிக்கை : 52