சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தேவை அதிகரித்துள்ள போதும் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்கின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2026 5:58PM by PIB Chennai

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தேவை அதிகரித்துள்ள போதும் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதாக  தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் சந்தை நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு வி சி அசோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோலிய பொருட்களின் கணிசமான தேவை அதிகரிப்புக்கு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் பருவகால வேளாண் நடவடிக்கைகள் மற்றும் அறுவடைப் பணிகள் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

அத்துடன் பிற தனியார் துறை எண்ணெய் விநியோகஸ்தர்களுடன் ஒப்பிடும் போது பொதுத்துறை சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருள் விலை குறைவாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பொதுத்துறை விற்பனை நிலையங்களை சார்ந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் போதுமான அளவில் இருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வாங்கவும் தேவையின்றி பதற்றம் அடைந்து எரிபொருள்களை வாங்கி சேமிப்பதைத் தவிர்க்குமாறும் திரு அசோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

***

AD/IR/KPG/SE

 


(வெளியீட்டு அடையாள எண்: 2263888) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English