சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 70-வது ஆண்டு தினத்தையொட்டி சிறப்பு தபால் உறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 2:16PM by PIB Chennai

 

என்எல்சி இந்தியா நிறுவனம் தமது 70-வது ஆண்டு தினத்தையொட்டி நெய்வேலியில் உள்ள தமது தலைமை அலுவலகத்தில் இன்று (20.05.2026) சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிறுவனத்தின் 70-ம் ஆண்டு பயணத்தையொட்டி அதன் நினைவாக நெய்வேலியில் சிறப்புத் தபால் உறையை அஞ்சல் துறை வெளியிட்டது.

இந்தத் தபால் உறையை தென்மண்டல தலைமை அஞ்சல் துறை அதிகாரி திரு சையீத் ரஷீத் வெளியிட்டார்.  அதனை என்எல்சி நிறுவனத் தலைவரும் மேலாண் இயக்குநருமான திரு பிரசன்ன குமார் மொட்டுப்பள்ளி பெற்றுக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் அஞ்சல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர்கள், உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

***

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263312) வருகையாளர் எண்ணிக்கை : 178
இந்த வெளியீட்டை படிக்க: English