சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

நாளந்தா பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா- பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பி கே மிஸ்ரா பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 6:24PM by PIB Chennai

பீகார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள  நாளந்தா பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பி கே மிஸ்ரா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது 14 நாடுகளைச் சேர்ந்த 221 பட்டதாரிகளை அவர் வாழ்த்தினார். அத்துடன் அவர்களின் கல்விசார் சாதனை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் அடிப்படையில் அமைந்தது என்று குறிப்பிட்டார். பழங்கால நாளந்தா மகாவிஹாரத்தை வரலாற்றின் மிகச் சிறந்த கற்றல் மையங்களில் ஒன்றாக குறிப்பிட்ட டாக்டர் மிஸ்ரா, பல்கலைக்கழகங்கள் வெறும் நிறுவனங்களாக இருக்கின்றன என்றும் சில பல்கலைக்கழகங்கள் நாகரிகத்தின் சின்னங்களாக விளங்குபவையாகவும் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். இவற்றில் நாளந்தா பல்கலைக்கழகம், பிந்தைய வகையைச் சேர்ந்தது என்று அவர் கூறினார்.

இப்பிராந்தியத்தின் வரலாற்று மற்றும் புவியியல் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் மிஸ்ரா, அறிவு என்பது உரையாடலுக்கு உகந்ததாகவும் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதாகவும் மனித சமூகத்தின் பெரும் நலனை நோக்கியதாகவும் இருக்க வேண்டும் என்ற நாளந்தாவின் அடிப்படைக் கொள்கையை சுட்டிக்காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் புதிய கார்பன் வெளியேற்றம் இல்லாத வளாகத்தை அவர் பாராட்டினார். இந்த சிறந்த பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற கல்வி கண்டங்கள் முழுவதும் பரவும் என்று தாம் உறுதியாக நம்புவதாக டாக்டர் மிஸ்ரா கூறினார்.

தற்போதைய 21-ம் நூற்றாண்டுக் குறித்து சுட்டிக்காட்டிய டாக்டர் மிஸ்ரா, செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், குவாண்டம் கணினி ஆகியவற்றில் மனித சமூகம் முன்னெப்போதும் இல்லாத தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். எனினும், இக்காலக்கட்டம் பருவநிலை மாற்றம், புவிசார் அரசியல் மோதல்கள், அதிகரித்து வரும் சமூக வேறுபாடுகள் உள்ளிட்ட நிச்சயமற்ற தன்மைகளுடன் உள்ளதாக கூறினார். மனித சமூகத்தின் முன்பாக உள்ள முக்கிய கேள்வியானது, நம்மால், அதிக தகவல்களையோ அல்லது தொழில்நுட்பத்தையோ உருவாக்க முடியுமா என்பது மட்டுமின்றி, அறிவு என்பது ஞானம், அறநெறி, இரக்கம், மனித பொறுப்புடமை ஆகியவற்றுடன் தொடர்ந்து இணைந்திருக்குமா என்பதுதான் என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262915&reg=3&lang=1

 

***

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262945) வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க: English