சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

எரிபொருள்கள் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது - தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் தொழில்துறை நிறுவனம் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 5:09PM by PIB Chennai

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில், பிபிசிஎல், எச்பிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்கள் தடையின்றி விநியோகித்து வருகின்றன. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் தற்போது  தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. எந்தவிதக் கட்டுபாடுகளுமின்றி விநியோகங்கள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் தொழில்துறைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு  வி சி அசோகன், எரிசக்திப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், எண்ணெய் தொழில்துறை நிறுவனங்கள், முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். 

எண்ணெய் முனையங்கள், கிடங்குகள், எல்பிஜி நிரப்பு ஆலைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இது நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து மறு நிரப்புதல் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். விநியோகச் சூழல் நிலையாக உள்ளதென்றும் அது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் வழக்கமான முறையில் தங்கள் கொள்முதலை மேற்கொள்ளுமாறும் தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எரிபொருள் இருப்புக் குறித்த நம்பகமான, சரியான தகவல்களை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262847&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262944) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English