விவசாயத்துறை அமைச்சகம்
கோடை காலப் பயிர் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டை விட 3.07 சதவீதம் அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 7:24PM by PIB Chennai
கோடை காலப் பயிர் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 3.07 சதவீதம் அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள் சாகுபடி 15.05.2026 வரை 24.97 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 23.76 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
சிறு தானியங்கள் சாகுபடி 16.01 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 14.25 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
எண்ணெய் வித்துக்கள் சாகுபடி 11.04 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இது 9.58 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
மொத்தமாக அனைத்துப் பயிர்களும் இந்த ஆண்டு இதுவரை 83.08 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இது 80.01 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262478®=3&lang=1
(Release ID : 2262478)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2262513)
வருகையாளர் எண்ணிக்கை : 10