சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் துறைமுகப் பாதுகாப்புப் பயிலரங்கை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 7:06PM by PIB Chennai

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், "துறைமுக செயல்பாடுகளில் பாதுகாப்பை 2026" வலுப்படுத்துதல்" என்ற கருப்பொருளில், "துறைமுக பாதுகாப்புப் பயிலரங்கம் நிகழ்ச்சியை மே மாதம் 15-ஆம் தேதி அன்று நடத்தியது. பாதுகாப்பான, உறுதியான மற்றும் தடையற்ற துறைமுக செயல்பாடுகளை உறுதி செய்வதில் துறைமுகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்படியாக இந்நிகழ்ச்சி அமைந்தது. இந்த பயிலரங்கத்தில் பாதுகாப்பு கையேடுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப மற்றும் கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன. மேலும், தொழில்துறை நிபுணர்களால் தீ பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கை தொடர்பான செயல்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.

திரு.சுசாந்த குமார் புரோஹித், துறைமுக ஆணைய தலைவர் தனது உரையில், துறைமுகத்தின் செயல்திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி மற்றும் அனைத்து துறைமுக செயல்பாடுகளிலும் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

 திரு ராஜேஷ் சௌந்தரராஜன்,  துறைமுக ஆணைய துணைத்தலைவர் தனது உரையில், துறைமுக அமைப்பின் செயல்திறன் தயார்நிலை. பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் செயல்திறன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான திட்டமிட்ட பார்வை மற்றும் செயல்திட்டங்களை எடுத்துரைத்தார்.

 திரு சுப்ரத் திரிபாதி, மேலாண்மை திட்ட ஆலோசகர், அதானி குழுமம் துறைமுகங்களின் செயல்திறன் மேம்பாட்டை வலுப்படுத்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடைமுறைகள், தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் முன்கூட்டிய அபாய மேலாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். திரு பி. ரவீந்திரன். முதன்மை ஆலோசகர், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கூறுகையில், பாதுகாப்பு என்பது தொடர்ச்சியான செயல்முறை என்றும், துறைமுக செயல்பாடுகளில் பாதுகாப்பான, திறமையான மற்றும் விபத்தற்ற பணிச்சூழலை எல்லா வித சூழ்நிலைகளிலும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திரு தெபி பிரசாத் தாஷ், முதன்மை ஆலோசகர், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பேசுகையில்,  துறைமுகப்பணிகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் நிறைவேற்றுவதற்காக பணிச்செயல்முறைகள் குறித்த போதுமான விளக்கம், பாதுகாப்பு தேவைகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு மற்றும் நிலையான செயல்முறை வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தல் அவசியம் என வலியுறுத்தினார். மேலும் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைவரும் விழிப்புடன் இருந்து, பொறுப்புடன் செயல்பட்டு, பாதுகாப்பற்ற நடைமுறைகளை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத ஒரு நிலையை உருவாக்குவது அவசியம் என்று கூறினார்.

மகளிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் மௌன நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பட்டிமன்றம், வினாடி வினா. கோலப்போட்டி மற்றும் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திரு டி. ரமேஷ். மூத்த துணை போக்குவரத்து மேலாளர், வ.உ.சி துறைமுக ஆணையம் நன்றியுரை வழங்கினார்.

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262470) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English