அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மெல்லிய படலங்களில் பதிக்கப்பட்ட நானோ தங்கம், சுய ஆற்றல் கொண்ட சென்சார்களை உருவாக்க உதவுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 3:48PM by PIB Chennai

மிகச்சிறிய வெப்ப ஏற்ற இறக்கங்களை, மின் சமிக்ஞைகளாக, திறன் வாய்ந்த முறையில் மாற்றக்கூடிய புதிய மெல்லிய நெகிழ்வுப் படலமானது, நவீன ஒளி உணர் சாதனங்களுக்கும், குறைந்த வெப்ப கருவிகளுக்கும்,  சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்றவற்றுடன் தொடர்புடைய மேம்பட்ட மின்னணு அமைப்புகளுக்கும் பயனுள்ளவையாக இருக்கும்.

அடுத்த தலைமுறை நவீன சாதனங்கள், தானியங்கி உணர் கருவிகள் (சென்சார்), போன்றவற்றுக்கு, மிகச்சிறிய வெப்ப ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி மின் சமிக்ஞைகளாக மாற்றக்கூடிய, எடை குறைந்த பொருட்களின் தேவை வலுவாக உள்ளது.

முந்தைய பிளாஸ்மோனிக்-பைரோ எலக்ட்ரிக், பிவிடிஎஃப் கலப்பு அமைப்புகள் மேம்பட்ட வெப்ப-மின்சார மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் அத்தகைய அணுகுமுறைகள் குறைந்த கட்டுப்பாட்டுடன் கூடிய கலப்பின இடைமுகங்களைச் சார்ந்துள்ளன. இது மெல்லிய, அணியக்கூடிய, குறைந்த மின்சக்தி கொண்ட மின்னணு சாதனங்களுக்குப் பொருந்துவதில்லை.

வெப்ப, ஒளித் தூண்டுதல்கள் இரண்டிற்கும் ஏற்ற, அதிவேக, குறைந்த மின்னாற்றல் கொண்ட, சுய-ஆற்றல் சாதனங்களை உருவாக்குவதற்காக, பிளாஸ்மோனிக், பைரோஎலக்ட்ரிக் பாலிமர்களை இணைப்பதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

 

அறிவியல் - தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான, மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தைச்  சேர்ந்த விஞ்ஞானிகள், ஒரு பொதுவான ஃபெரோஎலக்ட்ரிக் பாலிமரில் மிகச் சிறிய அளவிலான நானோ தங்கத்தைப் பதிக்கும்போது, அதன் பைரோ எலக்ட்ரிக் செயல்திறன் வியத்தகு முறையில் அதிகரிக்கிறது என்பதை நிரூபித்துள்ளனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262288&reg=3&lang=1

 

***

(Release ID : 2262288) 

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262458) வருகையாளர் எண்ணிக்கை : 73
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी