சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடி-யின் வத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளி வருடாந்தர ஆராய்ச்சி கண்காட்சியை நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 6:13PM by PIB Chennai

சென்னை ஐஐடி-யின் கீழ் செயல்படும் வத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளியான டபிள்யூஎஸ்ஏஐ, செயற்கை நுண்ணறிவு மற்றும் தர ஆய்வு தொடர்பான 100 செயல்திட்டங்களைக் காட்சிப்படுத்தவுள்ளது. 18.05.2026 அன்று நடைபெறும் வருடாந்தர ஆய்வு காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சியில் இவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்கவிரும்பும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களும் மாணவர்களும் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeY1JPxOYUXzwDnbcT3HKLcAbCmXC4X3YehXSpLntMf-YBAGw/viewform?pli=1 என்ற இணையதள இணைப்பின் மூலம் பதிவு  செய்து கொள்ளலாம். 

இந்த நிகழ்வு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைக்கும். இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை ஐஐடி-யின் டபிள்யூஎஸ்ஏஐ-யின்  தலைவர் பேராசிரியர் பலராமன் ரவீந்திரன், இந்த வருடாந்தர ஆய்வுக் கண்காட்சி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் என்று கூறினார்.

இந்த நிகழ்வு குறித்து https://wsai.iitm.ac.in/events/wsai-annual-research-showcase-2026/ என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்

---

SS/PLM/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261536) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: English